செய்திகள்

சனி, மே 23, 2020
graphic “இந்த ஆண்டு மட்டுமாவது  மே மாத ஊதியம் தரவேண்டும்” அரசுக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை

“இந்த ஆண்டு மட்டுமாவது மே மாத ஊதியம் தரவேண்டும்” அரசுக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை

 கடந்த 2012 ஆம் ஆண்டு, மாதம் 5000 என்ற தொகுப்பூதியத்தின் அடிப்படையில், இசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கான சிறப்பாசிரியர்கள் சுமார் 16549 பேர் பகுதிநேர ஆசிரியர்களாகப் பள்ளிக்கல்வித்துறையால் நியமிக்கப்பட்டனர். அவர்களுள் 200 மாற்றுத்திறனாளி பகுதிநேர ஆசிரியர்களும் அடங்குவர்.
graphic ‘1000 மாதாந்திர உதவித்தொகையை 3000 ஆக உயர்த்துக’ அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

"1000 மாதாந்திர உதவித்தொகையை 3000 ஆக உயர்த்துக’ அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை"

சென்னை பல்லாவரத்தின் புனித செபாஸ்டின் குடியிருப்பில் வசிக்கும் பதினெட்டு பார்வையற்ற குடும்பங்கள் ஒன்றிணைந்து ஓர் இசைக்குழுவை நடத்திவருகின்றனர். தற்போதைய கரோனா ஊரடங்கு காரணமாக, சமூக, கலாச்சார மற்றும் பல்வேறு மத நிகழ்வுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அனைவருமே வருமானம் ஏதுமின்றி, வீட்டின் நான்கு சுவர்களுக்குள் முடங்கியிருக்கின்றனர்.
graphic இதழ்களிலிருந்து: இருளில் ஒளியாவோம், இருவரும் விழியாவோம்!

இதழ்களிலிருந்து: இருளில் ஒளியாவோம், இருவரும் விழியாவோம்

 இருவர் மட்டுமே வசிக்கும் அந்த வீடு அன்பாலும் காதலாலும் நிறைந்திருக்கிறது. பார்வைத்திறன் இல்லாத மகேந்திரனும் ஷோபனாவும் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் எல்லா வலிகளையும் சிக்கல்களையும் எதிர்கொண்டாலும், இன்று மதிக்கத்தக்க நிலைக்கு உயர்ந்துள்ளனர். மகேந்திரன் உதவிப் பேராசிரியராகவும், ஷோபனா அரசுப் பள்ளி ஆசிரியையாகவும் பணியாற்றுகிறார்கள். இவர்களை இணைத்ததுடன், இவர்களின் வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக்கியிருக்கிறது காதல்!
read more from the magazines
graphic ஜூன் முதல் தேதி பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, குழப்பத்தில் தவிக்கும் சிறப்புப் பள்ளி மாணவர்கள்

ஜூன் முதல் தேதி பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, குழப்பத்தில் தவிக்கும் சிறப்புப் பள்ளி மாணவர்கள்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் எதிர்வரும் ஜூன் முதல் தேதி தொடங்குவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது. அமைச்சரின் இந்த அறிவிப்பு, உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பல்வேறு கேள்விகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
click here to read more about examinations
graphic "கொரோனா பேரிடர் நிவாரண நிதி குறைந்தபட்சம் ரூ . 5000 வழங்காவிட்டால்... மாற்றுத்திறனாளிகள் போராட்டம் தீவிரமடையும்" தலைவர்கள் எச்சரிக்கை

கொரோனா பேரிடர் நிவாரண நிதி குறைந்தபட்சம் ரூ . 5000 வழங்காவிட்டால்... மாற்றுத்திறனாளிகள் போராட்டம் தீவிரமடையும்" தலைவர்கள் எச்சரிக்கை

 கொரோனா பேரிடர் மற்றும் ஊரடங்கு காரணமாக வருவாய் இழந்து தவிக்கும் குடும்பங்களில் இடம்பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க குறைந்தபட்சம் ரூ . 5000 வழங்க வலியுறுத்தி கருப்பு சின்னம் அணிந்து அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டங்கள் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வியாழன் (மே 7, 2020) அன்று நடைபெற்றன.
click here to read more news about agitations
graphic சிந்தனை: கோஷங்களை முழக்கங்களாய் மாற்றுவோம்

சிந்தனை: கோஷங்களை முழக்கங்களாய் மாற்றுவோம்

 கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி, ரிஷிகேஷிலுள்ள இந்திய அறிவியல் மருத்துவ நிறுவனத்தின் இயக்குநரான பேராசிரியர் திரு. ரவிகாந்த் அவர்கள், முன்யோசனையற்ற, மிகவும் பிற்போக்குத்தனமான, முற்றிலும் மனிதநேயத்திற்கு விரோதமான  ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார்.
click here to read more thoughts